Wednesday, April 10, 2013

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!!

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக, அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான்.

உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது.

என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும், என வேண்டினான்.

இராவணன் உபதேசித்தான் ........

1. உன் சாரதியிடமோ, வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வர்.

2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என எண்ணாதே.

3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

4. நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல், எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே.

5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே, ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.

6. இறைவனை, விரும்பினாலும் மறுத்தாலும், முழுமையாகச் செய்.
 
 

No comments:

Post a Comment