Tuesday, May 7, 2013

கார்ல் மார்க்ஸ்!

ஒரு மனிதன் 15 ஆண்டு காலம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து தனது மூன்று பிள்ளைகளை வறுமைக்கு பலி கொடுத்த பின்பும் சிந்தனை, புத்தகம், எழுச்சி இதனை மட்டுமே சிந்தித்து உலகமே போற்றும் ஒரு புரட்சி நாயகன். மார்க்ஸின் மனைவி ஜென்னி தனது பிள்ளைகள் ஒவ்வொருவாராய் தாய்பால் கூட இன்றி வறுமையில் மடியும் வேளையிலும் தன் கணவரின் சிந்தனைகள் இதனால் தடைபடுமோ, வருததிற்குள்ளாகுமோ என்றே சிந்த்திதுள்ளார் அந்த தியாகப் பெண்!!! நட்பு என்னும் சொல்லுக்கு இலக்கணமாக கார்ல் மார்க்ஸின் கடைசி நாள் வரை தன்னால் இயன்ற மட்டிலும் கார்ல் மார்க்ஸின் வறுமையை தன் தோளில் சுமந்து தன் நண்பருக்கு உதவிய அவரது நண்பர் பிரடெரிக் ஏங்கல்ஸ்,

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, தங்க இடமின்றி வாழ நேர்ந்த போதும் 'சமதர்மகொள்கை' என்ற தன் இலக்கிலிருந்து மாறவே இல்லை மார்க்ஸ் என்ற அந்த மாமனிதன். அவருக்கு வானம் வசப்பட்ட அளவிற்கு வாழ்க்கை வசப்படவில்லைதான். ஆனால் இன்றைய உலகில் ஒரு தொழிலாளியின் நலன் காக்கப்படும் ஒவ்வொரு கணமும் மார்க்ஸுக்குதான் நன்றி சொல்கிறது வரலாறு. மார்க்ஸின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் இதுதான்...துன்பமும், துயரமும் போட்டிப் போட்டுக்கொண்டு நம்மை தாக்கினாலும், நாம் வகுத்துக் கொண்ட இலக்கை நோக்கி நம் பயணம் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடர வேண்டும். அவ்வாறு தொடர்ந்தால் ஒருவேளை வாழ்க்கை வசப்படாவிட்டாலும், நிச்சயம் நாம் விரும்பும் வானம் வசப்படும்.


சிதம்பர இரகிசியம்!!!

சித்தர்களில் மிக முக்கியமான சித்தரான ஆசான் திருமூலர் அருளிய திருமந்திரத்தில்

"மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே"

என்று கூறுகிறார்.

அதாவது மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம் என்ற பொருளைக் குறிகின்றது.

சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது. இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.

சித்தர்களின் உடற்கூற்று அறிவியல்படி ஒரு நாளில் மனிதரில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600. விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600). மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன,

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

இன்னும் பல இரசியங்களை தன்னுள் வைத்துள்ளது சிதம்பரம். சிதம்பர இரகிசியம் என்பது மானிட மற்றும் உலகை இயக்கும் சித்தர்கள் வகுத்த 96 தத்துவங்களையும் உள்ளடக்கி உள்ளது. இவற்றைச் சித்தர்கள் கலியுக முடிவில் அறிவிப்பர் என்கின்றன சித்த ஏடுகள்.
 
 

Monday, May 6, 2013

பாட்டி வைத்தியம்!!!

1. நெஞ்சு சளிக்கு - தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலிக்கு - ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்புசுக்கு - பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்க்கு - நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. வாய் நாற்றம் - சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

6. உதட்டு வெடிப்புக்கு - கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

7. அஜீரணம் - ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

8. குடல்புண்க்கு - மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

9. வாயு தொல்லைக்கு - வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

10. வயிற்று வலிக்கு - வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

11. மலச்சிக்கல் - செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

12. சீதபேதி - மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

13. பித்த வெடிப்புக்கு - கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

14. மூச்சுப்பிடிப்புக்கு - சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15. சரும நோய்க்கு - கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16. தேமல் - வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17. மூலம் - கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18. தீப்புண் - வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19. மூக்கடைப்புக்கு - ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20. வரட்டு இருமல் - எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

21. நரம்பு சுண்டி இழுத்தால் - ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

22. பல்லில் புழுக்கள் - சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

23. உடல் பருமன் குறைய - வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

24. தேன் உடல் பருமனைக் குறைக்கும். தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

25. வெண்மையான பற்களைப் பெற - ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

26. கணைச் சூடு குறைய - சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

27. வலுவான பற்கள் - வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

28. உடல் சூடு - ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

30. கக்குவான் இருமல் - வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

31. உள்நாக்கு வளர்ச்சி - உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

32. இரத்தசோகை நோய்க்கு - தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

33. உடலில் தேமல் மறைய - தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.

- வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
- ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.
- மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.
- 1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
- மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.

35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.

தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்.

Tuesday, April 23, 2013

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

Monday, April 22, 2013

திருச்செங்கோடு பெயர்க்காரணம்

திருச்செங்கோடு என்றால் அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிறமலை என்றும், செங்குத்தான மலை என்றும் பெயர். அறுபத்திமூன்று நாயன்மார்களில்... ஒருவரான விரல்மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்ற இத்தலம் சுமார் 1370 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், செடி, கொடிகள், மாடமாளிகைகள் நிறைந்ததாக இருந்ததால் கொடிமாடசெங்குன்றுர் என்றும், ரிஷிகள், தேவர்களின் இருப்பிடமாக இருந்ததால் திரு என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச்செங்குன்றூர் என்று அழைக்கபட்டது. ஆதிசேஷ பாம்பு மேருமலையை பிடித்த போது காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தால் மலை செந்நிறம் ஆனதால் இப்பெயர் வந்ததாகவும் கூறுவர். இப்பெயர் காலப்போக்கில் மறுவி திருச்செங்கோடு என்று அழைக்கபடுகிறது.

நாமக்கல் மாவட்டதில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது. கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு சிவா தலங்களில் மிக முக்கியமானதாக இக்கோவில் உள்ளது. இங்கு சிவனும் பார்வதியும் இரண்டற கலந்து ஒரே உருவமாய் காட்சி தருகின்றனர். இக்கோவிலில் சிவதலமும், திருமால்தலமும் ஒன்றாக அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு.

மேலும் இங்கு மூர்த்தி, தலவிருட்சம் , தீர்த்தம் ஆகியவையும் உள்ளன. இத்திருத்தலத்தில் சிவன், முருகன், விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகளும் உள்ளன. இது சிவனின் அறுபத்திநான்கு வடிவங்களில் 22வது வடிவம் என்று கூறப்படுகிறது.

 

Tiruchengode is the pride of Tamilnadu because the first of Gandhi Ashram was started here under the able guidance of Rajaji. The construction of ashram has brought this little town into limelight and become well known all over India.In ancient days it was called ‘Tiru Kodi mada senkundram’.The hill is slightly red in color. So it is called –Sengundram-red hill. Kodi means flags. Flags for Lord Murugan, lord Shiva and Adikesava Perumal are different. So the name was Tiru Kodi mada senkundram.

It is a part of region; once ruled by kings like Valvil Ori and Kumanan. Both of the kings were known in Tamil history for their valour and Philanthropy.

This small town comes under Namakkal district; The town is very near to Erode just 20 Kms away in terms of distance. River Cauvery is the main source of supply of drinking water to the town.



Saturday, April 20, 2013

வாழ்க்கை தத்துவம்!!!

ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரியவைக்க நினைத்தார். எல்லாரையும் அழைத்து உக்கார வைத்து, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காண்பித்தார்.

அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டார்.

சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன் மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவாக குருவையே எழுப்பி கேட்டான்.

அவர் கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இருந்தது?'

'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'

'பல் இருந்ததா?'

'இல்லை.'

'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'
 
 

திருக்குறளுக்கு ஓவிய விளக்கம்!

திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் விளக்கும் வகையில், ஒவியங்களாக வரைந்துள்ளார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர். சிறுவயது முதலே கல்வியின் மீதும், தமிழ் மொழியின் மீதும் தனக்கு இருந்த ஆர்வமே இந்த முயற்சியை செய்யத் தூண்டியதாகக் கூறுகிறார் கணினி அறிவியலில் இளநிலை படிக்கும் அந்த மாணவி.

விருதுநகர் மாவட்டம் மாணிக்கம் நகரில் வசித்து வரும் சேர்மநாதனின் மகள் ஹேமசௌந்தரி. சிறுவயது முதலே, ஓவியம் வரைவதில் திறன் பெற்றவராய் திகழ்ந்த இவர், தமிழ்ப் பற்றின் காரணமாக, திருக்குறளின் 133 அதிகாரங்களையும் ஓவியங்களாக தீட்டியுள்ளார்.

இவரது எண்ணங்கள் மூலம், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரமும், வண்ண வண்ண ஒவியங்களாக உயிர் பெற்றுள்ளன. கற்றோருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு என்பதற்கேற்ப தன்னுடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிவதாக கூறுகிறார் இவர்.

21 மீட்டர் நீளமும் ஒரு அடி அகலமும் உள்ள காகிதத்தில், சுமார் 3 வார காலம் இடைவிடாது வரைந்து தன் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் ஹேமசௌந்தரி. தன் முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 1330 திருக்குறளுக்கும் ஒவியங்களால் விளக்கம் அளிக்கும் பணியை தொடங்கியிருக்கிறார் இவர். தங்கள் மகளின் முயற்சிக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாக கூறும் ஹேமசௌந்தரியின் பெற்றோர், அவரது அடுத்த முயற்சியும் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

படித்துக் கொண்டிருக்கும் போதே, காலையிலும், மாலையிலும் ஓய்வு நேரத்தில் இத்தகைய சாதனை முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்கின்றனர் ஹேமசௌந்தரியின் ஆசிரியர்கள். செய்யுள் வடிவிலான திருக்குறளுக்கு, ஓவியம் மூலம் விளக்கம் கொடுத்திருப்பது வித்தியாசமான முயற்சி என்றும் அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

கல்வி பயிலும் வயதில் ஏதாவது ஒரு துறையில் சாதனை புரிய வேண்டும் என்று ஒவ்வொரு மாணவரும் கருதுவது உண்டு. பெற்றோர், ஆசிரியர், மற்றும் நண்பர்கள் அளிக்கும் ஊக்கமே, இத்தகைய சாதனை இலக்குகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திண்மையை மாணவர்களுக்கு அளிக்கும் என்பது கல்வியாளர்களின் கருத்து.